தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை பொழிய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் பரவலாக ஆங்காங்கே கன மற்றும் மிதமான மழை பொழிந்து வரும் நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கரூர், திருச்சி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பரவலாக மழைபொழிந்தது. பூந்தமல்லி, கரையான்சாவடி, குமணன்சாவடி, காட்டுப்பாக்கம், பாடி, அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம், கொரட்டூர் உள்ளிட்ட இடங்களில் மழைபொழிந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரியில் உள்ள கூடலூர் பஜார் மற்றும் பந்தலூரில் தலா 10 சென்டிமீட்டர் மழையும், கிருஷ்ணகிரியில் 8 சென்டி மீட்டர் மழையும் பொழிந்துள்ளது.