ரஜினிகாந்த் 'நான் ரசியலுக்கு வருவது உறுதி' என அறிவித்த தேதியில் இருந்து ரசிகர்கள் அனைவரும் காவலர்களாக உருமாறி இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் ரஜினி மக்கள் மன்றம் அமைப்பை துவங்கி சமூக நல உதவிகளை செவ்வனே செய்து வருகிறார்கள்.
கத்தார் ரஜினி மக்கள் மன்றம் கடந்த ஆண்டு 10.09.2018 தேதியில், அங்கீகாரம் பெற்று பல்வேறு சமூக பணிகளை சிறப்பாக செயல் படுத்தி வருகிறது. தலைவர் 168 புதிய திரைப்பட அறிவிப்பு, யதார்த்தமாக, அதே தினத்தில் முன்பே திட்டமிடப்பட்ட கத்தார் ரஜினி மக்கள் மன்றத்தின் வெற்றி பயணத்தின் முதலாம் ஆண்டு விழா 11.10.2019 (வெள்ளிக்கிழமை) மாலை, தலைநகர் தோஹாவில் அமைந்துள்ள சைத்தூண் (Zaitoon) உணவகத்தில், விருந்து மண்டபத்தில் இரட்டிப்பு குதூகலத்தோடு கொண்டாடப்பட்டது.
மன்ற உறுப்பினர்களான காவலர்கள், மற்றும் அவர்களின் குடும்பத்தார், குழந்தைகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் குழுமியிருந்து, மாலை பொழுதை மகிழ்ச்சியான நினைவுகளாக பதிய வைத்தனர்.
மன்றத்தின் செயலாளர் கார்த்திக் அனைவரையும் வரவேற்று பேச, அவரை தொடர்ந்து இணை & துணை உறுப்பினர்களான குரு, பால்ராஜ், உமாஷங்கர், வெங்கட் ஆகியோர் வாழ்த்துரை வழங்க, தகவல் தொடர்பு செயலாளர் சிவசங்கர், "மக்கள் தலைவர் ரஜினி- ஒரு வாழ்த்துப்பா" என்னும் தலைப்பில் நெடுங்கவிதை வாசிக்க, தொடர்ச்சியாக கத்தார் ரஜினி மக்கள் மன்றம் கடந்த ஓராண்டு ஆற்றிய சமூக பணிகள் உள்ளிட்ட ஆண்டறிக்கையை தகவல் தொழில் நுட்ப செயலாளர் செந்தில் படிக்க, அப்போது திரையில் ஒலி - ஒளிகாட்சியாக QRMM ஆற்றிய சமூக பணிகள் காண்பிக்கப்பட்டது.
பெரியவர், குழந்தைகள் என அனைவருக்கும், ரஜினி ஸ்டைலில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வென்றவருக்கும், கலந்து கொண்ட அனைத்தது குழந்தைகளுக்கும் பரிசு வழங்கியது கத்தார் ரஜினி மக்கள் மன்றம்.
பின்னர் மன்றத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு உணவு விருந்தினை அனைவரும் மகிழ்ச்சியோடு உண்டு நிறைவாக வாழ்த்தினர்.
இணைசெயலாளர் முத்து அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றி தெரிவிக்க, மன்ற உறுப்பினர்களுக்கு அவர்களின் குடும்ப புகைப்படம் மற்றும் கத்தார் ரஜினி மக்கள் மன்றம் அடையாள சின்னம் அச்சடிக்கப்பட்ட தேநீர் கோப்பை நினைவு பரிசாகவழங்கப்பட்டது.
திருமதி நிர்மலா குரு இந்த விழாவினை இயல்பாக, நேர்த்தியாக தொகுத்து வழங்கியது மட்டுமில்லாமல் விருந்தினரையும் பங்குபெற வைத்து ஊடாடும் கழ்ச்சியாக நடத்தி வைத்தார்.
நிகழ்ச்சி ஆரம்பித்த வினாடி முதல் கடைசி வரை சூப்பர் ஸ்டாரின் படத்தை போலவே கொஞ்சம் கூட விறுவிறுப்பு குறையாமல் முழு வேகத்தோடும், நேர்மறை ஆற்றல் (பாசிட்டிவ் எனர்ஜி) நிறைந்ததாகவும் விழா நடை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.