அதிபர் ஜின் பிங் தனது பதவிக்காலத்தை மூன்றாவது முறையாக நீட்டிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சீனாவில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது 20ஆவது கட்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. அக்டோபர் 16ம் தேதி முதல் ஒரு வார காலம் நடைபெற இருக்கும் இந்த மாநாட்டை மிக ஆடம்பரமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஏராளமான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கட்சிக்குள் ஒற்றுமையை வளர்ப்பதற்கான மாநாடு என சொல்லப்பட்டாலும் அதிபரின் முக்கியத்துவத்தை உணர்த்தவே இந்த மாநாடு எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவில் ஆட்சிக் கவிழ்ப்பு நடைபெற்றதாகவும் அதிபர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சர்வ தேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இருந்த போதும் அதிபராக ஜின் பிங் தொடர்கிறார்.
மாநாட்டிற்கான பணிகளை அதிபர் முன்நின்று செய்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்தன. மாநாட்டிற்காக 2296 பிரதிநிதிகளை நியமித்துள்ள ஜின்பிங் மூன்றாவது முறையாக பதவி நீட்டிப்பு செய்ய எதிர்க்கும் அதிருப்தி ஆட்களை சமாளிக்கும் வகையில் அவர்களை நியமித்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.