Published on 06/08/2023 | Edited on 06/08/2023

ரயில் பெட்டிகள் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 25 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில், ஷாஜத்பூர் - நவாப்ஷா இடையே அமைந்துள்ள சஹாரா என்ற ரயில் நிலையம் அருகே ராவல்பிண்டி செல்லும் ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயில், பாலத்தின் மீது சென்றபோது ரயிலின் 8 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் சுமார் 80 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், விபத்தில் சிக்கி 25 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் ரயில் பெட்டிகள் தடம் புரண்டது குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படுகாயம் அடைந்த பயணிகளுக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.