Skip to main content

செல்போன் இல்லையா....பீட்சா இலவசம்!

Published on 11/06/2019 | Edited on 11/06/2019

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் பிரெஷ்னோ நகரில் கரி பீட்சா நிறுவனம் உள்ளது. இந்த உணவகத்திற்கு சாப்பிட வருபவர்கள் தங்களது செல்போனை பயன்படுத்தாமல் அருகில் இருப்பவர்களுடன் பேசிக் கொண்டு சாப்பிட்டால் பீட்சா இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. குழுவாக சாப்பிட வந்தால் அந்தக் குழுவில் இருப்பவர்களுள் குறைந்தபட்சமாக நான்கு பேர் செல்போன் பயன்படுத்தாமல் சாப்பிட்டால் அந்த ஒட்டுமொத்த குழுவுக்குமே இலவச பீட்சா வழங்குகிறது இந்த உணவகம். இந்த சவாலுக்குத் தயாராக இருக்கும் வாடிக்கையாளர்கள் உணவகப் பணியாளர்களிடம் தங்களது செல்போனை ஒப்படைத்துவிட வேண்டும்.

 

 

pizza shop

 

 

செல்போன் லாக்கரில் வைக்கப்படும். அப்போது செல்போன் இல்லாமல் உடன் வந்தவர்களுடன் பேசிக்கொண்டு சாப்பிடுபவர்களுக்கு அடுத்து வரும் போது இலவசமாக பீட்சா வழங்கப்படும். வேண்டுமென்றால் அவர்கள் கையோடு வீட்டுக்கும் வாங்கிச் செல்லலாம். தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நிலையில், பொது மக்கள் பெரும்பாலும் இணைய தளம் பயன்பாடு மற்றும் கம்ப்யூட்டர் உள்ளிட்டவற்றில் அதிக நேரம் செலவிடுவதாலும், ஒருவருக்கொருவர் நேரில் பார்த்தால் கூட பேசிக்கக்கூடிய நிகழ்வுகள் குறைந்து வருவதால், பீட்சா இலவசம் என்ற சலுகை மூலம் அமெரிக்கா உணவகம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மக்கள் தங்கள் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் நேரம் செலவிட வேண்டும் என்ற நோக்கத்துடனே இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக அந்த பீட்சா நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்