உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இந்தியா பாகிஸ்தானுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி பாகிஸ்தானுக்கு 337 ரன்கள் இலக்கு வைத்த நிலையில் 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் எடுத்தது. இந்திய அணி வீரர்கள் ரோகித் சர்மா 140 ரன்களையும், விராட் கோலி 77 ரன்களையும், லோகேஷ் ராகுல் 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஷிகர் தவானுக்கு மாற்றாக களமிறக்கப்பட்ட தமிழக வீரர் விஜய் சங்கர் ஆட்டமிழக்காமல் 15 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக முகமது அமீர் 3 விக்கெட்டுகளையும், ஹஸன் அலி, ரியாஸ் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்த ரன்களில் இதுவே அதிக ரன்கள் ஆகும்.
.
மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டு 302 ரன்கள் இலக்காக கொடுக்கப்பட்டது. இருப்பினும் 40 ஓவரில் 6 விக்கட்டுகளை இழந்து 212 ரன்கள் எடுத்து தோற்றது பாகிஸ்தான்.
உலகக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்கிற வரலாறை மீண்டும் இந்திய அணி தக்கவைத்துள்ளது. தொடர்ந்து ஏழாவது முறையாக உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியுள்ளது.