900 அடி நீளமுள்ள ஹைட்ரஜன் நிரம்பிய பனிப்பாறை சூரிய மண்டலத்திற்குள் வருவதை வானியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
‘ஒமுவாமுவா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஹைட்ரஜன் பனிப்பாறை சூரிய மண்டலத்திற்குள் நுழைந்துள்ளதாகவும், இது இயற்கையில் மிகவும் அரிதான ஒரு நிகழ்வு எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 900 அடி நீளமுள்ள இந்த பனிப்பாறை சூரிய மண்டலத்திற்குள் வருவது இதுவே முதன்முறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சனி கிரகத்தின் சுற்று வட்டப்பாதை அருகே உள்ள இந்த பனிப்பாறை அதனை கடக்கப் பத்தாயிரம் ஆண்டுகள் ஆகும் என்றும் கூறியுள்ளனர். முதன்முதலில் 2017 இல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பாறை, வால் நட்சத்திரம் முதல் சுருட்டு வடிவ விண்கலம் வரையிலான பலவற்றுடன் ஒப்பிடப்பட்டு தற்போது, இது முழுவதுமாக ஹைட்ரஜன் நிரம்பிய பனிப்பாறையாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்த பனிப்பாறையின் கிராபிக்ஸ் படத்தையும் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.