Published on 28/05/2022 | Edited on 28/05/2022
![Optional petition received regarding change workplace](http://image.nakkheeran.in/cdn/farfuture/630CBDB2MN-t4cY5kgHfYUYhgylFGfUNdAa6QQPzETs/1653731339/sites/default/files/inline-images/733_2.jpg)
மத்திய மண்டல காவல்துறை தலைவர், திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் ஆலோசனைபடி, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் இன்று(28.5.2022) திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கான பொது பணியிட மாறுதல், விருப்பத்தின்படியும், மூன்று (ஒரே காவல் நிலையம்) மற்றும் 5 வருட காலம் ஒரே இடத்தில் பணிபுரிந்தவர்கள் என்ற அடிப்படையிலும், கலந்தாய்வின் அடிப்படையிலும் பணி இட மாறுதல் தொடர்பாக விருப்ப மனு பெறப்பட்டது.
இதனையடுத்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிட மாறுதலுக்கான உத்தரவுகளை விரைவில் வழங்கவுள்ளார். பல வருடங்களுக்கு பிறகு காவல்துறையினரை நேரில் அழைத்து விருப்ப பணி இடமாறுதல் வழங்கப்பட உள்ளது குறிப்பிடதக்கது.