Published on 21/12/2018 | Edited on 21/12/2018

இன்னும் 4 நாட்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில் அதற்கான கொண்டாட்டங்கள் உலகமெங்கும் களைகட்ட தொடங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து தேசிய குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார். மேலும் அங்குள்ள குழந்தைகளுடன் விளையாடியும் பொழுதை கழித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தன்னை பரிசளிக்க அனுமதித்த மருத்துவமனை நிர்வாகத்திற்கு நன்றியையும், கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.