சீனாவிலிருந்து வந்த முகக்கவசங்கள் தென்கொரியாவில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தால் லட்சக்கணக்கான முகக்கவசங்களை வேண்டாம் எனத் திருப்பி அனுப்பியுள்ளது வடகொரியா.
கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதில் முக்கிய பங்குவகிக்கும் முகக்கவசங்களுக்கு உலகின் பல நாடுகளில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த சூழலில், சீனாவிலிருந்து வந்த முகக்கவசங்கள் தென்கொரியாவில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தால் அவற்றை திருப்பி அனுப்பியுள்ளது வடகொரியா. வடகொரியாவின் எல்லைப் பகுதியில் உள்ள கேசாங்கில் கரோனா அறிகுறிகளுடன் ஒருவர் கடந்த ஜூலை மாதம் கண்டுபிடிக்கப்பட்ட சூழலில், அந்த நகரின் எல்லைகள் அனைத்தையும் சீல் வைக்கவும், அப்பகுதியில் முழு ஊரடங்கு பிறப்பித்து உத்தரவிட்டார் அதிபர் கிம் ஜாங் உன்.
இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்நிலையில், சீனாவிலிருந்து அண்மையில் வடகொரியாவுக்கு முகக்கவசங்கள் வந்தன. ஆனால், இந்த முகக்கவசங்கள் தென்கொரியாவில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தால் அவற்றை திருப்பி அனுப்பியுள்ளது வடகொரியா. இரு கொரிய நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதட்டமான சூழலை தொடர்ந்து, வடகொரியாவில் தென்கொரிய பொருட்கள் மீதான தடை உத்தரவு வலுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.