உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48,135 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக இத்தாலியில் 13,155, அமெரிக்கா 5,112, பிரான்ஸில் 4,032, ஈரானில் 3,036 பேர் இறந்தனர்.

உலகளவில் கரோனா பாதிப்பில் இருந்து 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அதேபோல் உலகளவில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 9,45,875 ஆக அதிகரித்துள்ளது.
ஸ்பெயினில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்தது. இந்த நாட்டில் ஒரே நாளில் 616 பேர் உயிரிழந்ததால், ஸ்பெயினில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,003 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1965 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 151 ஆனது.