Skip to main content

பாகிஸ்தான் உளவுத்துறை தான் புல்வாமா தாக்குதலுக்கு காரணம்- முஷாரப் பரபரப்பு பேச்சு

Published on 07/03/2019 | Edited on 07/03/2019

காஷ்மீரின் புல்வாமா பகுதியில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பொறுப்பேற்றது.

 

musharaf

 

இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பால்கோட் பகுருதியில் தாக்குதல் நடத்தியது. இந்நினையில் ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பாகிஸ்தானிலிருந்து செயல்படவில்லை என பாகிஸ்தான் மறுத்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் அதிபரான முஷாரப், பாகிஸ்தான் உளவுத்துறைதான் ஜெய்ஷ் இ முகமது  இயக்கத்தை பயன்படுத்தி இந்தியா மீது இந்த தாக்குதலை நடத்தியது என குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் முகாம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை நான் வரவேற்கிறேன். அந்த அமைப்பு என்னை 2 முறை கொல்லப் பார்த்தது. ஆனால் அப்போது இருந்த சூழல் காரணமாக என்னால் அந்த அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என கூறினார். முஷாரஃபின் இந்த கருத்து இந்தியாவிலும் மற்ற உலகநாடுகள் மத்தியிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்