Published on 05/01/2021 | Edited on 06/01/2021
![jlk](http://image.nakkheeran.in/cdn/farfuture/RUEExpptERpHz1nbSWKPy5BImWBuSTjwtAs_rt4QcSU/1609871403/sites/default/files/inline-images/00123_0.jpg)
வரும் 26ம் தேதி இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க இருந்த பிரிட்டன் பிரதமரின் இந்தியப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டனில் உருமாறிய கரோனா பரவிவரும் சூழலில் இந்தியப் பயணத்தை ரத்து செய்தார் போரிஸ் ஜான்சன். இதுதொடர்பான தகவலை மத்திய அரசுக்கு அந்நாட்டு அதிகாரிகள் முறைப்படி தெரிவித்துள்ளார்கள். மேலும், போரிஸ் ஜான்சன் இதனை நேரடியாக பிரதமர் மோடியிடம் தொலைப்பேசி வாயிலாக தெரிவித்துள்ளார். இதனால், இந்த ஆண்டு வெளிநாட்டுத் தலைவர்கள் இன்றி குடியரசு தினம் கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.