ஃபேக் ஐடிக்களால் அதிகம் பின்தொடரப்படும் தலைவர்களில் உலகளவில் மோடி முதலிடத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளங்களின் மிகவும் ஈடுபாட்டுடன் இருப்பவர். எந்தவொரு கருத்தையும், இரங்கலையும் அல்லது வாழ்த்தையும் அவர் ட்விட்டர் வழியாக பதிவிட்டே உலகிற்கு வெளிப்படுத்துவார். குறிப்பாக சமூக வலைத்தளங்கள் அல்லது டிஜிட்டலாக சமூகத்தோடு இணைந்திருப்பது மிகவும் எளிதாகவும், வசதியாகவும் இருப்பதாக அவரே சொல்லியிருக்கிறார்.
பிரதமர் மோடியை ட்விட்டரின் வழியாக பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 40.3 மில்லியன். இவர்களில் 60% பேர் ஃபேக் ஐடிக்கள் எனப்படும் போலிக்கணக்குகள் என ட்விப்லோமசி எனும் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவிலான இந்தத் தகவல் பட்டியலில் பிரதமர் மோடியே முதலிடத்தில் இருக்கிறார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது 47.9 மில்லியன் ஃபாலோவர்களில் 37% போலிக்கணக்குகளைக் கொண்டிருக்கிறார். போப் பிரான்ஸிஸ், பெனோ நீட்ட் மற்றும் மன்னர் சல்மான் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
World Leaders and their Fake followers
— Twiplomacy ? (@Twiplomacy) February 21, 2018
Some of the most followed world leaders and their share of bot followers as determined by https://t.co/TdNIomSdNt. Graphics prepared by @Saosasha @gzeromedia#DigitalDiplomacy pic.twitter.com/viid9ZTReV
பாப் பாடகிகள் டெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் கிம் கர்தாஸ்யான் ஆகியோரது கணக்குகளையும் கணிசமான அளவு போலிக்கணக்குகள் பின்தொடர்வதாக அந்தத் தகவல் தெரிவிக்கிறது.