Poetry book release ceremony of Tamils living in Korea!

கொரியா தமிழ்ச் சங்கத்தின் தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாள் நிகழ்ச்சியில் சங்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரும் ஆராய்ச்சியாளருமான சகாய டர்சியஸ் பீ அவர்களின் முதல் கவிதை புத்தகமான ’சிதறல்கள்‘ வெளியீட்டு விழாவும் ஒரு நிகழ்வாக அமைந்தது.

Advertisment

விழாவின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காரை செல்வராஜ் ‘சிதறல்கள்’ புத்தகத்தை வெளியிட்டார். அதுமட்டுமின்றி அருமையான அறிமுக உரையும் நிகழ்த்தினார். புத்தகத்தின் 112 பக்கங்களையும் ஒருவரி கூட விடாமல் படித்த விதமும் குறிப்புகள் பல எடுத்து, தனக்குப் பிடித்த கவிதைகளை ரசிக்கும்படிச் சொல்லி புத்தகத்தை வெளியிட்ட விதமும் அனைவரையும் கவர்ந்தது.

Advertisment

இந்தக் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு தென் கொரியாவிற்கான இந்திய தூதர் மாண்புமிகு ஸ்ரீப்ரியா ரங்கநாதன் நல்லதொரு வாழ்த்துரை வழங்கியிருந்தார்.

இந்த நூல் வெளியீட்டு விழா குறித்து நூலாசிரியர் கவிஞர் சகாய டர்சியஸ் கூறும்போது, “இந்தப் புத்தகம் நல்ல முறையில் வெளிவர, பல்வேறு சிரமங்களுக்கு இடையிலும் எனக்கு எல்லா விதத்திலும் உறுதுணையாகவும், பக்க பலமாகவும் இருந்து என்னை வழி நடத்தி, நல்ல ஒரு முகவுரையும், வாழ்த்துரையும் அளித்த அன்பு அண்ணன் ஆதனூர் சோழனுக்கும், பலதரப்பட்ட வேலைகள் இருந்தும் மன மகிழ்வுடன் அழகானதொரு அணிந்துரையும் வாழ்த்துரையும் வழங்கிச் சிறப்பித்த மலேசிய பாடலாசிரியர் யுவாஜி, மனதினை வருடிச்செல்லும் அழகானதொரு வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்த பேச்சாளர், எழுத்தாளர், ஊடகவியலாளர் என்ற பன்முகப் பரிமாணங்களைக் கொண்ட எனது அருமைத் தோழமை பொன் கோகிலம் ஆகியோருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisment

கொரிய தமிழ்ச் சங்க பொங்கல் விழாவில் எனது புத்தகத்தை வெளியிட உதவிய கொரிய தமிழ்ச் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும், நல்லதொரு வாழ்த்துரை வழங்கிய சகோதரி திருமதி யசோதா இராமசுந்தரத்திற்கும், என்னைத் தொடர்ந்து எழுத ஊக்குவிக்கும் எனது குடும்பத்தார் மற்றும் அன்பு நண்பர்கள் அனைவருக்கும், மேலும் அச்சிட்டு வெளிவர உதவிய சிபி பதிப்பகத்திற்கும் எனது உளம் கனிந்த நன்றியினை உரித்தாக்கிக்கொள்கிறேன். உங்கள் அனைவரின் அன்பிலும் தொடரும் ஆதரவிலும் எனது எழுத்தின் சிறகுகள் இன்னும் விரியும்” என்று தெரிவித்தார்.