Skip to main content

சுற்றுலா சென்ற இளம் பெண்ணுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்... என்ன தெரியுமா..?

Published on 23/08/2019 | Edited on 23/08/2019

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர் மிராண்டா என்ற இளம்பெண். இவர் தனது குடும்பத்தினருடன் எல்லோ ராக் என்ற பகுதிக்கு சென்றுள்ளார். அந்தப் பகுதியில் கடந்த 50 வருடங்களுக்கு முன்பு ஆயிரக்கணக்கான வைரங்கள் கிடைத்ததாக அப்பகுதி மக்கள் அவரிடம் தெரிவிதுள்ளனர். இதை கேட்டு ஆச்சரியமடைந்த அந்த பெண் தன் நண்பர்களிடம் இதுபற்றி தொலைப்பேசியில் தெரிவித்துள்ளார். அவரின் பேச்சை கேட்ட அவரது நண்பர்கள் நீ அந்த பகுதியில் நன்றாக தேடிப்பார்த்தால் உனக்கு கூட வைரம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்கள். இதனை கேட்டு ஆசை கொண்ட அவர், வைரம் எடுக்கும் முடிவுக்கு வந்துள்ளார்.
 

y



வைரம் எடுப்பதற்காக அவர் யூடியூப்பில் சில வீடியோக்களை பார்த்துள்ளார். வைரக்கல் எப்படி எடுப்பது என்று பார்த்துக் கொண்டிருந்த மிராண்டாவுக்கு, அவர்கள் சொன்ன வழிமுறையின் படி கடற்கரையில் தேடியுள்ளார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அவரது கண்ணில் 73 காரட் எடை கொண்ட வைரக்கல் கிடைத்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த் மிராண்டா அக்கல்லை எடுத்து சென்று டைமெண்ட் டிஸ்கவரி சென்டரில் இதன் உண்மைத் தன்மையை பற்றி கேட்டுள்ளார். அவர்களும் இது உண்மையான வைரம் என்று கூற, மிராண்டா மேலும் மகிழ்ச்சி அடைந்தார். இந்நிலையில் அவர் இந்த வைரத்தை விற்க போவதில்லை என்றும், இதை மோதிரமாக அணியவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
 

 

சார்ந்த செய்திகள்