நெதர்லாந்தில் உள்ள ஒரு சூப்பர் மார்கெட்டிற்கு சென்ற ஒருவர் அங்குத் திருடி மாட்டிக்கொண்டார். அவர் திருடச்செல்லும் போது தான் வளர்க்கும் ஒரு லவ் பேட்ஸ் பறவை ஒன்றையும் தன்னுடன் எடுத்து சென்றுள்ளார். அவர் திருட்டில் ஈடுபடும்போது அந்த பறவை அவரது தோளில்தான் இருந்துள்ளது. இதையடுத்து கையும் களவுமாக மாட்டியவரை போலீசார் கைது செய்த போது, இந்த பறவையையும் சேர்த்து கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அனைத்தையும் காவல்துறையினர் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு காமெடியாக ஒரு போஸ்டையும் போட்டுள்ளனர். அதில் அவர்கள் நாங்கள் ஒரு திருடனைக் கைது செய்யும்போது. அவருடன் சேர்ந்து இந்த பறவையும் திருட்டில் ஈடுபட்டதாக கருதி இந்த பறவையையும் கைது செய்துள்ளோம். எங்களிடம் பறவை கூண்டு இல்லாததால் அதையும் சிறையில் தான் அடைத்துள்ளோம். ஆனால் அந்த பறவையிடம் நாங்கள் எந்த விசாரணையும் நடத்தவில்லை, பறவைக்காக பிரெட் மற்றும் தண்ணீர் வைத்துள்ளோம் என் குறிப்பிட்டனர். திருட்டில் ஈடுபட்டதற்காக போலீசார் பறவையைக் கைது செய்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.