Skip to main content

லேப்டாப் யூஸ் பண்ணாட்டி டிஸ்மிஸ்! - அமைச்சர்களுக்கு பிரதமர் கட்டளை

Published on 31/05/2018 | Edited on 31/05/2018

அமைச்சர்கள் அடுத்த ஆறு மாதங்களுக்குள் மடிக்கணினி பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமரே உத்தரவிட்டு அதகளப்படுத்தி உள்ளார்.
 

KP Sharma

 

நேபாளம் நாட்டின் பிரதமராக இருப்பவர் கே.பி.சர்மா ஒலி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் அந்நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றார். அப்போது அடுத்த ஆறு மாதங்களுக்குள் பிரதமர் அலுவலகத்தை காகித பயன்பாடு இல்லாமல் ஆக்குவேன் உறுதியளித்திருந்தார். 
 

இந்நிலையில், நேபாள ஆசிரியர் கூட்டமைப்பு நடத்திய 12ஆவது பொது மாநாட்டில் கலந்துகொண்ட கே.பி.சர்மா ஒலி, அடுத்த அடுத்த ஆறு மாதங்களுக்குள் மடிக்கணினி பயன்படுத்த கற்றுக்கொள்ளாத அமைச்சர்கள், அவர்களது பதவியை இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 

ஏற்கெனவே இதுதொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்திருந்ததால், அடுத்த ஆறு மாதங்களுக்குள் எல்லோரும் தயாராக இருக்க வேண்டும். இனி அரசு தரப்பு நடவடிக்கைகளை மடிக்கணினி மூலமாகவே செய்யவேண்டும். அமைச்சர்கள் இதற்காக பிரத்யேக உதவியாளர்களை நியமித்துக் கொள்ளலாம். அதேபோல், பணிநீக்கம் செய்யப்படும் அமைச்சர்களுக்கு ஒரு மடிக்கணினி வழங்கப்படும். அடுத்த தேர்தலுக்கு முன்பாவது அவர்கள் மடிக்கணினியை முழுமையாக கற்றுக்கொண்டு வரவேண்டும். நேபாளத்தை தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்த நாடாக மாற்றுவதற்கே இந்த நடவடிக்கை என பிரதமர் கே.பி.சர்மா ஒலி தெரிவித்துள்ளார். ஒருவேளை இது டிஜிட்டல் நேபாளத்துக்கான ஒத்திகையாக இருக்குமோ என பலர் இதனை விமர்சித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்