கனடாவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபெரல் கட்சி தனி பெரும்பான்மை பெறாத நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான ஜக்மித் சிங் -கின் 'நியூ டெமோகிராடிக் பார்ட்டி' ஆதரவுடன் அவர் மீண்டும் பிரதமர் ஆகிறார்.
338 தொகுதிகளைக் கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு, நேற்று தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவடைந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான 170 இடங்களை எந்த கட்சியும் பெற முடியவில்லை. இந்த சூழலில் ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சிக்கு நியூ டெமோகிராடிக் பார்ட்டி ஆதரவு கொடுத்ததை அடுத்து, ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் கனடா நாட்டின் பிரதமர் ஆகியுள்ளார். ஜஸ்டின் ட்ரூடோவின் லிபெரல் கட்சி 139+ இடங்களும், நியூ டெமோகிராடிக் பார்ட்டி 20+ இடங்களையும் பெற்றுள்ளது. இதனையடுத்து விரைவில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையில் கனடாவில் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.