Published on 16/07/2023 | Edited on 16/07/2023

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலை பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான லிகுட் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக அந்நாட்டு மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனது அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது பெஞ்சமின் நெதன்யாகுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்புவார் என்று மருத்துவமனை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.