Skip to main content

அமெரிக்காவில் முதன்முறையாக பிரதமர் மோடி செய்யப்போகும் சாதனை...

Published on 16/09/2019 | Edited on 16/09/2019

7 நாட்கள் சுற்றுப்பயணமாக வரும் 21-ம் தேதி அமெரிக்கா புறப்படும் பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

 

trump joins with modi in howdy modi

 

 

இதில் மிகமுக்கியமான நிகழ்வாக செப்டம்பர் 22ல் ஹூஸ்டன் நகரில் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். ஹலோ மோடி என பொருள்படும் வகையில் 'ஹவ்டி மோடி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் கலந்துகொள்ள உள்ளனர். பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றும் இதில் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் பங்கேற்று உரையாற்ற உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இந்திய அமெரிக்க மக்கள் இடையே உறவை பலப்படுத்தும் வகையிலும், இருநாட்டு வணிக உறவை மேம்படுத்தும் வகையிலும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மத்தியில் அந்நாட்டு அதிபர் ஒருவரும், இந்திய பிரதமரும் இணைந்து உரையாற்றப் போவது இதுவே முதல் முறையாகும்.

 

 

சார்ந்த செய்திகள்