இந்தியாவின் இரண்டாம் பெரும் மென்பொருள் நிறுவனம் 'இன்ஃபோசிஸ்'. தென்கிழக்கு ஆசியாவில் தனது நிறுவனத்தை விரிவடையச்செய்ய, சிங்கப்பூரைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான 'டெமாசெக்' (Temasek) நிறுவனத்துடன் இணைந்து செயலாற்ற முடிவு செய்துள்ளது. இந்த இணைப்பில் 60% பங்குகள் இன்ஃபோசிஸ் நிறுவனத்திடமும், 40% பங்குகள் டெமாசெக் நிறுவனத்திடமும் இருக்கும் என்று அறிவிப்பு வந்துள்ளது. இன்ஃபோசிஸின் துணைத் தலைவரும், தென்கிழக்கு ஆசியா பிராந்தியத்தின் தலைவருமான 'ஸ்வேதா அரோரா'வே (Shveta Arora) இதற்கு தலைமை செயல் அதிகாரியாக இருப்பார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தை, அடுத்த ஐந்தாண்டுக்குள் வருவாய் அடிப்படையில் பின்னுக்கு தள்ளி ஹெச்.சி.எல் நிறுவனம் முன்னேற இலக்கு நிர்ணைத்துள்ளதாக, நேற்று ஹெச்.சி.எல் நிறுவனம் அறிவிப்பு செய்திருந்த நிலையில், இன்று இந்த நிகழ்வு மிகவும் கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது.