ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தலிபான்கள் அமைப்பை நிறுவியவர்களுள் ஒருவரான முல்லா அப்துல் கனி பரதர், ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக அறிவிக்கப்படவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் ஜலாலாபாத் நகரில், ஆப்கான் மக்கள் சிலர் தலிபன்களின் கொடியை நீக்கிவிட்டு, ஆப்கானிஸ்தான் நாட்டின் தேசியக் கோடியை ஏற்றியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தலிபன்கள், மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
#BREAKING: Taliban fires at Afghan locals in Jalalabad city of Afghanistan after the crowd removed Taliban flag and waved Afghan tricolour flag openly. Taliban terrorists can be seen firing at the crowd to disperse them. Taliban fears an open rebellion. pic.twitter.com/MzkDPSMKkQ
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) August 18, 2021
இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.