Published on 14/12/2018 | Edited on 14/12/2018

இந்திய அரசு புதிதாக வெளியிட்ட 2000, 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் இனி நேபாளத்தில் செல்லாது என நேபாள அரசு அறிவித்துள்ளது. இதுவரை இந்திய நாட்டின் பணத்தையும் நேபாளத்தில் உபயோகப்படுத்திக்கொள்ளும் நிலைமையே இருந்தது. இந்நிலையில் 2020 ல் அங்கு 'நேபாள் ஆண்டு' பிரம்மாண்டமாக கொண்டாடப்படவுள்ளது. இதனால் அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் பெரும்பாலானோர் இந்தியர்களாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 20 லட்சம் இந்தியர்கள் அங்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அந்த நேரத்தில் வருமானத்தை பெருக்கும் நோக்கமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவின் காரணமாக இந்தியாவில் வேலை செய்யும் நேபாள மக்கள் பெரிதும் பாதிப்படைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.