இந்தோனேசியாவில் கடந்த வெள்ளிகிழமை அன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் 7.5 என்ற ரிக்டர் அளவில் தாக்கியது. இதனை தொடர்ந்து சுனாமியும் சுலவேசி தீவை தாக்கியது. இந்த விபத்தில் சுமார் 800பேருக்கு மேல் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இது மட்டும் அல்லாமல், நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. பாதிப்படைந்த மக்கள் தங்குவதற்கு வீடு இன்றியும், உணவு இன்றியும் தவிக்கின்றனர். இந்தோனேசிய அரசு மீட்புப்படையை அனுப்பி பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு வருகின்றனர். உணவில்லாதவர்களுக்கு நிவாரணம் அளித்து வருகின்றனர். ஆனால், இப்பணிகளில் தாமதம் ஏற்படுவாதால், மக்கள் பாதிக்கப்பட்ட கடைகளில் இருக்கும் தங்களுக்கு தேவையான பொருட்களை சூறையாடும் நிலை ஏற்பட்டுள்ளது. சிலர் இதை பயன்படுத்தி தங்களுக்கு தேவையில்லாத பொருட்களை திருடவும் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.