இந்தியாவுக்கு வெளியே 30 இடங்களில் தமிழ் இருக்கை இருக்கிறது. மேலும் 5 வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை உருவாக்குவதற்கு தமிழக அரசு முயற்சித்து வருகிறது. தமிழ் இருக்கை என்பது தமிழ் மொழியை கற்பிக்க, ஆய்வு செய்யவென பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் உள்ள ஒரு பேராசிரியர் பொறுப்பு ஆகும்.
அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஹூஸ்டன் தமிழ் இருக்கை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக ஹூஸ்டன் தமிழ் இருக்கை அமைப்பு என்ற ஒரு அமைப்பு உள்ளது. அமெரிக்காவில் உள்ள தமிழர்களால் இது 2018ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த அமைப்பினர், தமிழ் இருக்கை அமைப்பதற்கான நிதியை திரட்டி வருகின்றனர்.
தமிழ் மொழியை கற்பிப்பதற்கும், பண்டைய தமிழ் இலக்கியங்கள், மற்றும் தமிழ் பாரம்பரியம், பண்பாடு போன்றவற்றை ஆராயவும் தமிழ் இருக்கைகள் பெரிதும் உதவியாக உள்ளன. மேலும், ஹூஸ்டன் தமிழ் இருக்கை குறித்தும் நிதி அளிப்பது தொடர்பாகவும் தெரிந்துகொள்வதற்கு அந்த அமைப்பு, 9841152211 எனும் வாட்ஸ் அப் எண்ணையும், info@houstontamilchair.org என்ற தளத்திலும் அறிந்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.