Skip to main content

ஆளுநரை அடித்து உதைத்த பொதுமக்கள்...

Published on 21/05/2018 | Edited on 21/05/2018

கிரீஸின் இரண்டாவது பெரிய நகரமான தசலோனிகி நகரத்தின் ஆளுநர்  யானில் போட்டரிஸ் பொதுமக்களால் தாக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தசலோனிகி நகரத்தின் ஆளுநரான 73 வயதான யானில் போட்டரிஸ் தேசியவாத எதிர்ப்பு கருத்து கொண்டவராக மக்களால் அறியப்படுகிறார்.

 

greek

 

 

 

அண்மையில் முதல் உலகப்போரில் துருக்கியர்களால் கொல்லப்பட்ட கிரேக்க இனத்தவர்களுக்கு  நினைவு செலுத்தும் விழாவிற்கு யானில் போட்டரிஸ் கலந்துகொள்ள வந்திருந்தார் இதை கண்ட பொதுமக்கள் கூட்டமாக ஆளுநர் யானில் போட்டரிஸை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். அதன்பிறகு போலீசாரால் மீட்கப்பட்ட ஆளுநர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

 

இந்த தாக்குதல் பற்றி கிரீக் ரிப்போட்டர் என்ற அந்நாட்டு  இணையதள பத்திரிக்கையின் கேள்விக்கு ஆளுநர் பதிலளிக்கையில் இது நான் எதிர்பார்க்காத ''கொடுங்கனவு'' எனவும். என் உடலின் எல்லா பகுதியிலும் தாக்குதல் நடத்தப்பட்டதகாவும் கூறினார்.

 

gkeek

 

 

 

அதேபோல் கிரேக்க பிரதமர் அலெக்சிஸ் இந்த தாக்குதல் பற்றிய அறிக்கையில் ஆளுநர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தீவிர வலதுசாரிகள் என கண்டனம் தெரிவித்துள்ளார். அதுபோல் இந்த தாக்குதலுக்கான விளைவுகள் கடுமையானதாக இருக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.

 

கிரேக்கத்தை ஆளும் கட்சியான இடதுசாரி சிரிஷா கட்சி இந்த ஆளுநர் மீதான தாக்குதலை பாசிச செயல் எனவும் வர்ணித்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்