Skip to main content

ஜப்பான் பிரதமர் திடீர் பதவி விலகல்...

Published on 28/08/2020 | Edited on 28/08/2020

 

Shinzō Abe quits pm post

 

ஜப்பானின் நீண்ட கால பிரதமராக இருந்து வரும் ஷின்சோ அபே (65), உடல்நலப் பிரச்சனை காரணமாகப் பதவி விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

 

கடந்த 2006 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் பிரதமராகப் பதவியேற்ற ஷின்சோ அபே, பதவியேற்ற ஒரு ஆண்டில் உடல்நல கோளாறு காரணமாகப் பதவி விலகினார். அதன்பின்னர் மீண்டும், 2012 ஆம் ஆண்டு அந்நாட்டின் பிரதமராக அவர் பொறுப்பேற்றார். கடந்த எட்டு ஆண்டுகளாக அந்நாட்டின் பிரதமராகச் செயல்பட்டுவந்த அவர், சமீபகாலமாகப் பெருங்குடல் அழற்சி காரணமாக அதிகமாக அவதிப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி காரணமாகப் பதவி விலகுவதாக அபே இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்