கூகுளில் யார் இடியட் என்ற கேள்வியை அனுப்பினால், அது உங்களுக்கும் அளிக்கும் பதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். கூகுளில் அடிக்கடி இதுபோன்ற சர்ச்சைக்குரிய புகைப்படங்களை காட்டுவது வழக்கமாக இருக்கிறது.
கடந்த மே மாதம் பப்பு என்று அடித்தால், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் புகைப்படம் கூகுளில் காட்டப்பட்டது. அதேபோல ஏப்ரல் மாதம், பிகு என்று அடித்தால் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் கட்டப்பட்டது. பிகு என்றால் பொய்சொல்லுபவர் என்று பொருள். இவ்வாறு மோடியின் புகைப்படத்தை காட்டியதற்கு பாஜகவினர் பலர் கண்டனத்தை தெரிவித்தனர்.
இப்போது ஆங்கிலத்தில் இடியட் என்று டைப் செய்து தேடினால், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் புகைப்படம் காட்டப்படுகிறது. கூகுளின் அல்காரிதம்படி, அதிகமாக தேடுபவர்கள் புகைப்படமே முதலில் வரும், ட்ரம்பின் புகம் அப்படித்தான் வந்துள்ளது. அதேபோல ட்ரம்பை பிடிக்காத ஆன்லைன் பயன்பாட்டாளர்களினால் இது செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் சொல்கின்றனர். இதனால் கூகுளில் தற்போது இடியட் என்ற பெயரை அதிகமாக டைப் செய்து மக்கள் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.