கூகுள் அஸிஸ்டெண்ட் மூலமாக ஸ்மார்ட்ஃபோன்களில் பல வேலைகளை எளிதில் செய்துக்கொள்ள முடியும் அதில் ஒன்றாக ஃபோனை அன்லாக் செய்வது. அதில் ஃபிங்கர் பிரிண்ட், ஃபேசியல் ரெக்ககனைஷன் மற்றும் குரலை வைத்து அன்லாக் செய்வது. இதில் தற்போது கூகுள் நிறுவனம் குரலை வைத்து ஃபோனை அன்லாக் செய்யும் முறையை நீக்க முடிவுசெய்துள்ளது.
சில போலி இணையதளங்களின் மூலம் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்படுவதும், ஏமாற்றப்படுவதும் தொடர்கதையாக மாறி வருகிறது. இந்நிலையில் கூகுளின் குரலை வைத்து ஸ்மார்ட்ஃபோனை அன்லாக் செய்யும் முறையை உடனடியாக நீக்க முடிவு செய்துள்ளது கூகுள் நிறுவனம்.
மோட்டோ Z மற்றும் பிக்சல் XL ஆகிய ஸ்மார்ட்ஃபோன்களில் குரலை வைத்து ஃபோனை அன்லாக் செய்யும் முறையை கூகுள் நிறுவனம் ஏற்கனவே 9.27 அப்டேட்டிற்கு பிறகு நிறுத்திவிட்டது. இதனையடுத்து மற்ற ஸ்மார்ட்ஃபோன்களிலும் ஓகே கூகுள் என கூறி ஃபோனை அன்லாக் செய்யும் வசதியும் நீக்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்து வெளியாக உள்ள பிக்சல் 3XL ஃபோனில் இந்த வசதியை நீக்கியுள்ளதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. தனிநபர் தகவல் பாதுகாப்பு குறித்த பல்வேறு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ள நிலையில், பாதுகாப்பு கருதி இந்த அன்லாக் வசதி நீக்கப்பட்டுள்ளதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.