Skip to main content

எக்ஸ் தளத்தை விற்ற எலான் மஸ்க்; ஆனால், ஒரு ட்விஸ்ட்!

Published on 29/03/2025 | Edited on 29/03/2025

 

Elon Musk sold the X platform to his XAi own company

பிரபல சமூக வலைதளமான ட்விட்டர், 2006ல் ஜாக் டோர்சி, நோவா கிளாஸ், பிஸ் ஸ்டோன் மற்றும் இவான் வில்லியம்ஸ் ஆகியோரால் துவங்கப்பட்டது. அப்போது, நிறுவனத்தின் லோகோ எனப்படும் சின்னமாக பறவையை தேர்ந்தெடுத்தனர். அதன்பின், 2012ல் லோகோ மேலும் நவீனமயமாக்கப்பட்டு, ஒற்றை நீல பறவையாக மாற்றப்பட்டது. 

அதன் பின்னர், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் - எக்ஸ் விண்வெளி ஆய்வு மைய நிறுவனருமான எலான் மஸ்க், ட்விட்டரைக் கடந்த 2023 ஆண்டு தன்வசப்படுத்திக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தார். ட்விட்டர் நிறுவனத்தின், சி.இ.ஓ பதவிக்கு ஒரு நாயை அமர்த்தி எலான் மஸ்க் சர்ச்சையை ஏற்படுத்தினார். இதையடுத்து, காலங்காலமாக இருந்த ட்விட்டர் தளத்தின் லோகோவான ‘நீலக் குருவி’யை கருமை நிறத்தில் ஆங்கில எழுத்தான எக்ஸ் (x) என்ற  வடிவில் லோகோவை மாற்றப்பட்டது. அதன் பின்னர், ட்விட்டருக்கு ‘எக்ஸ்’ என மறுபெயரிட்டப்பட்டது. 

இந்த நிலையில், தனது நிறுவனமான எக்ஸ் ஏ.ஐ நிறுவனத்துக்கு எக்ஸ் தள நிறுவனத்தை ரூ.2.82 லட்சம் கோடிக்கு எலான் மஸ்க் விற்றுள்ளார். இது குறித்து எலான் மஸ்க் தெரிவித்துள்ளதாவது, ‘எக்ஸ் நிறுனத்தை, எக்ஸ் ஏ.ஐ நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தரவு, மாதிரிகள், கணினி, விநியோகம் மற்றும் திறமையை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இது மகத்தான ஆற்றலை உண்டாக்கும். 

அதே வேளையில், பில்லியன் கணக்கான மக்களுக்கு புத்திசாலித்தனமான, அர்த்தமுள்ள அனுபவங்களை வழங்க வழி வகுக்கும். எக்ஸ் ஏ.ஐ மற்றும் எக்ஸ்-இல் உள்ள அனைவரின் கடுமையான அர்ப்பணிப்பையும் நான் அங்கீகரிக்க விரும்புகிறேன், அது எங்களை இந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளது. இது வெறும் ஆரம்பம்தான்’ என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்