இந்தியாவில் தற்போது மீடூ பாலியல் புகார் அதிகரித்து வருகிறது. அதேபோல கூகுள் நிறுவனத்திலும் பாலியல் புகார்கள் கடந்த இரண்டு வருடமாக அதிகரித்து வருவதாக கூகுள் நிறுவனத்தின் சிஇஒ வருத்தம் தெரிவித்துள்ளார். பாலியல் புகார்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். கூகுளில் இதுபோன்ற ஒழுக்கமற்ற செயல்பாடுகளுக்காக வருத்தமும் தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனத்தில் கடந்த இரண்டு வருடங்களாக வந்த பாலியல் புகாரில் சுமார் 48 பேருக்கும் அதிகமானோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் 13பேர் மூத்த மேனேஜர்கள் ஆவர். இவர்களுக்கு பணிக்கொடை எதுவும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2014ஆம் ஆண்டு பாலியல் புகார் காரணமாக ஆண்டிராய்டு மொபைல் ஓஎஸை உருவாக்கிய ஆண்டி ரூபின் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. வெளியேற்றியபோது அவருக்கு 90 மில்லியன் டாலர் பணிக்கொடையாக வழங்கப்பட்டது.