ஆஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத வகையில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீயில் இதுவரை 3000 ஏக்கர் காடுகள் எரிந்து நாசமாயின. காடுகளில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான மிருகங்கள் பலியாகின. வனங்களில் உள்ள மருத்து குணம் கொண்ட பல்வேறு வகையான தாவரங்கள், மரங்கள் ஆகியவை கூண்டோடு அழிந்தன.
இந்த இழப்பு ஒருபுறம் வருத்தத்தை ஏற்படுத்திய நிலையில், ஜெர்மனியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சரணாலயத்தில் தீ பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு ஜெர்மனியில் உள்ள கிரெஃபெல்டு குரங்குகள் பூங்காவில் புத்தாண்டு கொண்டாட்டம் கடந்த சில தினங்களுக்கும முன்பு கொண்டாடப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீவிபத்தில் பூங்காவில் இருந்த 32குரங்குகளில் 30 குரங்குகள் உயிரிழந்தன. தீவிபத்தில் குரங்குகளின் புகைப்படங்கள் பார்ப்பவர்களின் மனதை உருக்குவதாக உள்ளன.