Skip to main content

காருக்குள் நுழைந்த சிறுத்தை! - அசையாமல் இருந்ததால் தப்பிய பயணி

Published on 29/03/2018 | Edited on 29/03/2018

காட்டுக்குள் பயணித்தபோது காருக்குள் சிறுத்தை புகுந்ததால், அதில் பயணித்தவர்கள் எந்தவித பாதிப்பும் இன்றி தப்பித்துள்ளனர்.

 

தான்சான்யாவில் உள்ள செரங்கட்டி பகுதியில் தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார் பிரிட்டன் ஹேய்ஸ். இவர்கள் அந்தப் பகுதியில் வனவிலங்குகள் வசிக்கும் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென்று சிறுத்தைப் புலி ஒன்று காருக்குள் பாய்ந்து அமர்ந்தது.

 

வீடியோ - சி.என்.என் (CNN)

 

சில அங்குலங்கள் இடைவெளியில் உயிர்கொல்லி மிருகம் ஒன்று அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ந்துபோன ஹேய்ஸ், செய்வதறியாது திகைத்துள்ளார். அவர் உடன்வந்திருந்த வழிகாட்டி, ‘அசையாதீர்கள், அமைதியாக இருங்கள், அதன் கண்களைப் பார்த்துவிட வேண்டாம்’ என கட்டளை விதிக்க, அதை ஹேய்ஸ் மற்றும் குழுவினர் அப்படியே பின்பற்றினர். அந்த வழியாக வந்த மூன்று சிறுத்தைகளில் ஒன்று மட்டும் இவர்களின் கார் மீது ஏறியது. மற்றவை அந்த வழியாக சுற்றித்திரிந்தன. இந்த ஒட்டுமொத்த நிகழ்வையும் ஹேய்ஸ் தனது கேமராவில் படமெடுத்துள்ளார்.

 

தான்சான்யாவில் வெளிநாட்டினர் இதுபோன்ற பயணங்கள் மேற்கொள்வது வழக்கம். மிக ஆபத்தானதாக இருந்தாலும், இதனை மேற்கொள்ள பலர் ஆர்வம் காட்டிவருவது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்