உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்று ஃபேஸ்புக். ஃபேஸ்புக் தனது நிறுவனத்தின் தொழில்நுட்ப கட்டமைப்புகளில் தொடர்ந்து கவனம் செலுத்திவரும் நிலையில் ஃபேஸ்புக்கின் பெயரை மாற்ற அந்நிறுவனத்தின் தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 28ம் தேதி நடைபெற இருக்கும் வருடாந்திர கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை ஃபேஸ்புக் நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஸூக்கர்பெர்க் அறிவிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பெயர்மாற்றம் தொடர்பான தகவலுக்கு, " இதுபோன்ற வதந்திகள் மற்றும் யூகங்களுக்கு தங்களால் பதிலளிக்க முடியாது" என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 4ம் தேதியன்று தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக இரவு முதல் அதிகாலை வரை ஃபேஸ்புக், வாட்ஸ் அப் முடங்கிப் போனது. இதனால் மார்க் ஸூக்கர்பெர்க்கின் சொத்துமதிப்பில் 52 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்திருப்பதாகவும், இதனால் உலக பணக்காரர்கள் பட்டியலில் 5 ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டார் என்றும் தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.