Skip to main content

'ஆப்பிள்' நிறுவனத்தின் புதுவரவை வறுத்தெடுத்த 'சாம்சங்' மற்றும் 'சியோமி'!

Published on 19/10/2020 | Edited on 19/10/2020

 

Apple iphone 12 samsung


ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அதன் புதுவரவான ‘ஐஃபோன் 12’ மாடலை வெளியிட்டது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், ஃபோனுடன் ஜார்ஜர், ஹெட் செட் என எதுவும் வராது. வெறும் ஃபோன் மட்டுமே கிடைக்கும் என அறிவித்தது அந்நிறுவனம். 

 

இதனைத் தொடர்ந்து சாம்சங் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘உங்கள் கேலக்ஸி நீங்கள் எதிர் பார்ப்பதைக் கொடுக்கும். அடிப்படையான ஜார்ஜர், கேமரா, பேட்டரி உள்ளிட்ட ஸ்மார்ட் ஃபோனுக்குத் தேவையான அனைத்தும்’ எனப் பதிவிட்டது.


அதேபோல், சியோமி நிறுவனம் சமீபத்தில் அதன் புதுவரவான ‘எம்.ஐ.10 டி.ப்ரோ’ மாடலை வெளியிட்டது. அந்த ஃபோனை பதிவிட்டு அதன் கீழ் ‘எம்.ஐ.10 டி.ப்ரோ’ பெட்டியில் நாங்கள் எதையும் விடவில்லை அனைத்தையும் பேக் செய்திருக்கிறோம் எனப் பதிவிட்டது. 

 

இவை மட்டுமின்றி ஒன் ப்ளஸ் நிறுவனம் அறிமுகம் செய்த ‘ஒன் ப்ளஸ் 8டி’ அதன் ஜார்ஜருடன் வருகிறது என அந்நிறுவனம் பதிவிட்டுள்ளது. 

 

ஆப்பிள் நிறுவனத்தின்  ‘ஐஃபோன் 12’ மாடலுடன் அதன் ஜார்ஜர், ஹெட் செட் இல்லை எனும் அறிவிப்பு பல்வேறு தரப்புகளிலும் சிறு அதிருப்தியை ஏற்படுத்தியது. குறிப்பாக, சில ஆப்பிள் பிரியர்கள் மத்தியிலும் இது அதிருப்தியை ஏற்படுத்தியது. அதேவேளையில், ஆப்பிளின் போட்டி நிறுவனங்கள் அந்த அதிருப்தியைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றி விளம்பரம் செய்துவருகிறது.  

 

 

 

சார்ந்த செய்திகள்