Skip to main content

உலகக்கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து!!

Published on 15/07/2019 | Edited on 15/07/2019

இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை போட்டி ''டை'' ஆனதையடுத்து சூப்பர் ஓவரில் நியூசிலாந்தை வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து.

 England win the World Cup


லண்டனில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக நிக்கோலஸ் 55 ரன்களையும்,  டாம் லாதம் 47 ரன்களையும், வில்லியம்சன் 30 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ், லியாம்,பிளங்கெட்  தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.  அடுத்து களமிறங்கி விளையாடியது நியுசிலாந்து. இரு அணிகளுக்கும் 50 ஓவர் முடிவில் 241 ரன்கள் கிடைத்தது. வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.

சூப்பர் ஓவரும் ''டை'' ஆன நிலையில் அதிக பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து 6 பவுண்டரிகள் நியூசிலாந்தை விட அதிகம் அடித்திருந்தது குறிப்படத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்