சர்வதேச அளவில், பிட்காயின் விலை சரிவைச் சந்தித்த நிலையில், அதனை மீண்டும் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளார் எலான் மஸ்க்.
எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம், இந்திய மதிப்பில் 10 ஆயிரம் கோடி (1.5 பில்லியன் டாலர்) ரூபாய் மதிப்பிலான பிட்காயின்களை வங்கியுள்ளதாக அறிவித்தது. ஏற்கனவே #bitcoin என்ற ஹாஷ்டேக்கை எலான் மஸ்க், தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்ததிலிருந்தே பிட்காயின்களின் விலை அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது இந்த அறிவிப்பை தொடர்ந்து பிட்காயின்களின் விலை 17 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதன்மூலம், பிட்காயின்களின் விலை 17 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், டோஜ்காயின் விலையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன்மூலம், பிட்காயின் மீது முதலீடு செய்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து மேலும் பல தொழில் நிறுவனங்கள், பிட்காயினில் முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.