Published on 02/03/2019 | Edited on 02/03/2019

உலக பிரபலமான சுற்றுலா தலமான ஈபிள் டவர் பாகிஸ்தானில் இருப்பதாக காலை முதல் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதற்கு காரணம் பாகிஸ்தானை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஈபிள் டவரின் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு பாகிஸ்தானின் புகாத்ராபாத் நகரின் அழகான ஒளி என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு வைரலாகவே அவரை பலரும் கலாய்த்து வருகின்றனர். இதனால் ஈபிள் டவர் ஹாஷ்டாக் இந்தியா முழுவதும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதில் ஒரு சிலர் பிரான்ஸ் பிரதமரை டேக் செய்து ஈபிள் டவரை பாகிஸ்தானுக்கு விற்றுவிட்டீர்களா? என கேள்வி எழுப்பி கலாய்த்து பதிவிட்டு வருகின்றனர். பாகிஸ்தானில் ஏற்கனவே ஈபிள் டவர் மாதிரியில் ஒரு கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டு அதன் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.