Published on 23/11/2018 | Edited on 23/11/2018
எகிப்து நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை குறைப்பதற்காக அந்த நாடு தற்போது அரிசிகளை இறக்குமதி செய்துவருகிறது. அந்த வகையில் 2018-ம் ஆண்டுக்கான சர்வதேச அரிசி கொள்முதல் டெண்டரை அந்நாடு நடத்தியது. இறக்குமதி செய்யும் முன் அரிசிகளை சோதித்து அதன் பின் அதில் தேர்வாகும் அரிசிகளை இறக்குமதி செய்வதே வழக்கம். அதற்காக அரிசிகளின் மாதிரிகளை அனுப்ப சொல்லி எகிப்து கேட்டிருந்தது. அதில் இந்திய நாட்டின் அரிசி வகைகள் சோதனையில் தோற்றுபோயின. அதனால் இந்திய அரிசிகளின் இறக்குமதியை அந்நாடு நிராகரித்துள்ளது. அதேபோல் சீன நாட்டில் இருந்து அனுப்பட்ட அனைத்து வகை அரிசி மாதிரிகளும் சோதனையில் வெற்றிபெற்று இறக்குமதி செய்ய அனுமதி பெற்றுள்ளது.