Skip to main content

கரோனா காரணமாக தள்ளிப்போகிறது நியூசிலாந்து தேர்தல்...!

Published on 18/08/2020 | Edited on 18/08/2020

 

jacinda ardern

 

 

நியூசிலாந்தில் கரோனா நோய்த்தொற்று மீண்டும் கண்டறியப்பட்டதால் செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

நியூசிலாந்து நாட்டின் பிரதமாராக ஜெசிந்தா ஆர்டன் பதவி வகித்து வருகிறார். உலகெங்கும் கரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியதும் அதிரடியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தன்னுடைய நாட்டில் கரோனா பரவலை கட்டுக்குள் வைத்திருக்கிறார். கரோனா பாதிப்பு குறைந்த அளவில் இருக்கும் நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று. இதுவரை நிகழ்ந்த மொத்த மரணங்களின் எண்ணிக்கை பதினான்கு. வைரஸ் பரவல் பெரிய அளவில் இல்லாத காரணத்தால் ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டு சில மாதங்களுக்கு முன்பே அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பியது.

 

நூறு நாட்களுக்கு மேலாக எந்த தொற்றும் இல்லாத நிலையில் தற்போது மீண்டும் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அடுத்த மாதம் நடைபெற இருந்த தேர்தலை ஒரு மாதம் தள்ளி வைத்து அக்டோபர் மாதம் நடைபெறும் என அறிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்