![trump with kim](http://image.nakkheeran.in/cdn/farfuture/ANa3-pK6C8TmYcKdS_NBggf8uqB-M_iU23ldg8zsekc/1533347618/sites/default/files/inline-images/2_22.jpg)
உலகமே எதிர்பார்த்து வந்தது போல் அமெரிக்க அதிபர் மற்றும் வடகொரியா அதிபர் சந்திப்பு இன்று காலை இந்திய மணியளவில் 6:30 மணிக்கு நடந்துள்ளது. இச்சந்திப்பிற்கு முன்பு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் சந்திப்பை பற்றி நேற்று நள்ளிரவு மூன்று பதிவுகளை பதிவேற்றியுள்ளார் அதில் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை பார்ப்போம்...
Meetings between staffs and representatives are going well and quickly....but in the end, that doesn’t matter. We will all know soon whether or not a real deal, unlike those of the past, can happen!
— Donald J. Trump (@realDonaldTrump) June 11, 2018
இருநாடுகளின் அதிகாரிகளிடமும் நல்ல முறையில் சந்திப்புகள் நடந்துகொண்டிருப்பதாகவும், முடிவில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் அது விஷயமல்ல என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த முறையை போன்று ஒப்பந்தம் நடக்குமா என்று அல்லாமல் அனைவரும் அதை இம்முறை அறியப்போகிறோம் என்று அதில் பதிவேற்றியுள்ளார்.
Stock Market up almost 40% since the Election, with 7 Trillion Dollars of U.S. value built throughout the economy. Lowest unemployment rate in many decades, with Black & Hispanic unemployment lowest in History, and Female unemployment lowest in 21 years. Highest confidence ever!
— Donald J. Trump (@realDonaldTrump) June 11, 2018
அமெரிக்க பொருளாதார வளர்ச்சிகளை அடுத்த பதிவில் சுட்டிக்காட்டி, அமெரிக்க மக்களுக்கு அவர் மீது நம்பிக்கை வந்துவிட்டது என்றும் ட்வீட் செய்துள்ளார்.
The fact that I am having a meeting is a major loss for the U.S., say the haters & losers. We have our hostages, testing, research and all missle launches have stoped, and these pundits, who have called me wrong from the beginning, have nothing else they can say! We will be fine!
— Donald J. Trump (@realDonaldTrump) June 11, 2018
மேலும் இன்னுமொரு பதிவில், அவரின் சந்திப்புகளை பற்றி ஆரம்பித்திலிருந்தே விமர்சித்திருக்கிறார்கள். அவரது முயற்ச்சியால் தான் ஏவுகணை சோதனை, ஆராய்ச்சி போன்றவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தொடக்கத்தில் இருந்தே அவரை விமர்சித்தவர்களுக்கு வேறு வழி இல்லாமல் தற்போதும் விமர்சித்துக்கொண்டுதான் இருப்பதாகவும், நாம் எல்லோரும் நலமாக இருப்போம் என்று பதிவை முடித்துள்ளார்.