உரிய ஆவணங்கள் இல்லாமல் எல்லையைக் கடந்த மாட்டிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதால் பரபரப்பு கிளம்பியுள்ளது.
எல்லை தாண்டி சிக்கிக்கொண்ட பென்கா
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருக்கும் நாடுகளான பல்கேரியா மற்றும் செர்பியா எல்லைகளுக்கு இடையே சில கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. அதன்படி எல்லையைக் கடக்க ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இங்கு இருக்கிறது. இந்நிலையில், கடந்த மாதம் பல்கேரியாவின் மஜாராசிவோ என்ற கிராமத்தில் இருந்து பென்கா எனும் 5 வயது மாடு, மேய்ச்சலில் இருந்தபோது தவறுதலாக செர்பியா எல்லைக்குள் நுழைந்தது.
கிட்டத்தட்ட 2 வாரங்கள் செர்பியாவில் சுற்றித்திரிந்த பென்கா பின்னர் நாடு திரும்பியது. இந்நிலையில், செர்பியாவில் இருந்து பல்கேரியா சென்ற அதிகாரிகள், பென்காவை தூக்கிச்சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அங்கு உரிய சுகாதார ஆவணங்கள் இல்லாமல் எல்லையைக் கடந்த குற்றத்திற்காக பென்காவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இதனை ஐரோக்கிய கூட்டமைப்பைச் சேர்ந்த விலங்கு ஆர்வலர்கள் தீவிரமாக எதிர்த்தனர். பென்காவை உயிருடன் மீட்க பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், போராட்டங்களின் விளைவாக பென்கா மீதான தண்டனை வாபஸ் பெறப்பட்டுள்ளது. பென்காவை சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன.