Published on 13/02/2020 | Edited on 13/02/2020
சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் இருந்து பரவ ஆரம்பித்து, தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸின் பெயர் கோவிட்- 19 என மாற்றப்பட்டுள்ள சூழலில், இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 1300 ஐ கடந்துள்ளது.
உலகம் முழுவதும் 24 நாடுகளில் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் 60,000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் சூழலில், 1300 பேர் இதனால் பலியாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்றை குணப்படுத்த இதுவரை அதிகாரபூர்வமாக மருந்துகள் ஏதும் கண்டறியப்படாத சூழலில், உலக நாடுகள் பலவும் இதற்கான மருந்தை கண்டறிவது குறித்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.