Skip to main content

கரோனா பரவல்; ஒருநாளில் 250 பேர் பலி... இத்தாலியில் 1000 -ஐ கடந்த பலி எண்ணிக்கை...

Published on 14/03/2020 | Edited on 14/03/2020

இத்தாலியில் கரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 1,266 ஆக உயர்ந்துள்ளது.

 

corona virus effect in italy

 

 

சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 5,080 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கரோனா வைரசால் 1,37,702 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் இந்த வைரஸ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், இத்தாலி முழுவதுமே கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு இயல்பு நிலை முடங்கியுள்ள சூழலில், அங்கு 17,660  பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நேற்று ஒரே நாளில் மட்டும் கரோனா பரவலின் காரணமாக 250 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் இத்தாலியில் பலியானோரின் எண்ணிக்கை  1,016லிருந்து 1,266 ஆக உயர்ந்துள்ளது. உடல்நலம் சார்ந்த விஷயங்கள் மற்றும் அவசர வேலைகளைத் தவிரப் பிற காரணங்களுக்காக தாங்கள் வசிக்கும் இடங்களை விட்டு மக்கள் மற்ற இடங்களுக்குச் செல்ல இத்தாலியில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்