சீனாவில் பயங்கர நிலநடுக்கம் – 100 பேர் பலி
சீனாவில் 7.0 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 100 பேர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
சுற்றுலாப்பயணிகளின் முக்கிய தலமாக விளங்கும் ஜியுஹைகோ (Jiuzhaigou) என்ற இடத்தில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நில நடுக்கத்தால் வீடுகள், சாலைகள் பயங்கரமாக குலுங்கின. பொதுமக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறி அலறியடித்த படி சாலைகளில் ஓடினர்.