இன்றய தலைமுறையினர், பெரும்பாலமான நேரம் வீடியோ கேம் விளையாடுவதிலேதான் செலவிடுகிறார்கள். இதில் மிகமுக்கியாமானது சீனா. சீனாவின் வீடியோ கேம் ஆர்வலர்கள் கடந்த மாதம் மட்டும் 38 பில்லியன் அமெரிக்க டாலரை வீடியோ கேமி்ற்காக செலவு செய்துள்ளனர். இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குபின் சீன அரசு எந்த வீடியோ கேமையும் விற்பனைக்கு அனுமதிக்கவில்லை. காரணம், வீடியோ கேம் மூலமாக மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும் அவர்களின் படிப்பும் பாதிக்கப்படுவதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம் பல கட்டுப்பாடுகளுடன் 2018-ல், இதுவரை 5,000 புதிய கேம்களுக்கு சீன அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது சொற்பமான அளவு என்பது ஆச்சரியத்திற்குரியது. கடந்த ஆண்டு அவர்கள் அனுமதித்த புதிய வீடியோ கேம்களின் அளவு 14,000-க்கும் மேல். உலகத்தின் மாபெரும் வீடியோ கேம் உற்பத்தியாளர்கள் இவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.