Published on 21/03/2022 | Edited on 21/03/2022

கனடாவில் அரிய வகை டைனோசர் மீன் கண்டுபிடிக்கப்பட்டது. அது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன யுவேஸ் பைஸான் என்ற மீனவர் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது டைனோசர் மீன் சிக்கியது. சுமார் 10.5 அடி நீளம் கொண்ட இந்த அரிய வகை மீன் 226 கிலோ எடையும் கொண்டது. இந்த மீன் சுமார் 100 ஆண்டு வயதுடையது எனக் கணிக்கப்பட்டது. இதனால் அந்த மீனைப் பிடித்த மீனவர் அதை ஆற்றின் உள்பகுதிக்கு பத்திரமாக இழுத்துச் சென்று விடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.