பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சியின் வேட்பாளர் ஹாரூன் சுல்தான் வருகின்ற பாகிஸ்தான் பொது தேர்தலில் போட்டியிடுகிறார். ஜூலை 25 ஆம் தேதி பொதுத்தேர்தல். இவர் பஞ்சாப் மாகாணத்தின் முன்னாள் அமைச்சர் ஆவார். தற்போது நடக்கும் பிரச்சாரத்தின்போது, பெண்களுக்கு வாக்களிப்பது ஹராம் என்று சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
பிஎம்எல்-என் கட்சியின் ஆட்சியின்போது, சமூகநல அமைச்சராக இருந்த சுல்தான், இந்த தேர்தலில் 184வது தொகுதியில், பாகிஸ்தான் டெக்ரீக்-இ- இன்சாப் காட்சியை சேர்ந்த பெண் வேட்பாளரான ஜெஹ்ரான் பசித் சுல்தான் புஹாரியை எதிர்த்து போட்டியிடுகிறார், இவர் சுல்தானின் அண்ணி என்றும் தெரிவிக்கின்றனர்.
முஸபர்கர்ஹ் என்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தபோது சுல்தான்," நான் மதத்தின் வழியை பின்பற்றுபவன். அதனால்தான் பெண்களுக்கு வாக்களிப்பதை தவிர்க்கிறேன். பெண்களுக்கு வாக்களிப்பது ஹராம் ஆகும்" என்றார். மேலும், "நான் அல்லாவின் கட்டளையின்படி நடப்பவன். நாம் அனைவரும் அல்லாவின் கட்டளைக்கு மாறாக செய்வதை விட்டுவிடுவோம்" என்றார்.
.