Published on 04/01/2019 | Edited on 04/01/2019
சீனாவில் பள்ளி மாணவர்களை கண்காணிக்கும் வகையில் புதிய சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சிறிய ஆர்.எப் ஐடி பொருத்தப்பட்ட சீருடை மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த சீருடை அணிந்து பள்ளி வகுப்பறைக்குள் நுழையும்பொழுது தானாகவே வருகை பதிவேட்டில் வருகை குறிக்கப்படும். இதனால் மாணவர்கள் பள்ளியை கட் அடிக்க முடியாது. அதுமட்டுமின்றி மாணவர்கள் காணாமல் போனாலும் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். மேலும் வகுப்பில் மாணவர்கள் தூங்கினால் தானாக அலாரம் அடிக்கும் வசதியும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த திட்டம் குறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் இந்த திட்டம் விரைவில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.